இறுதி கட்டத்தில் குக் வித் கோமாளி 3..அந்த மூன்று வின்னர்ஸ் யார் தெரியுமா?

Published : Jul 21, 2022, 01:34 PM ISTUpdated : Jul 21, 2022, 01:39 PM IST
இறுதி கட்டத்தில் குக் வித் கோமாளி 3..அந்த மூன்று வின்னர்ஸ் யார் தெரியுமா?

சுருக்கம்

குக் வித் கோமாளி சீசன் 3-ல் நிகழ்ச்சியின் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ருத்திகா முதலிடத்திலும், தர்ஷன் இரண்டாவது இடத்திலும், அம்மு அபிராமி மூன்றாவது இடத்தையும் பிடிப்பார்கள் என கூறப்படுகிறது

ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக தன்வசம் ஈர்த்து வைத்துள்ளது விஜய் டிவி. இதில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நகைச்சுவையால் கவர்ந்து வருகிறது. அதன் விஜேக்கள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் குக் வித் கோமாளி பட்டி தொட்டி எல்லாம் பிரியர்களை தன் வசம் கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..

ஸ்டார் விஜய் மற்றும் disney+ hotstar ஆகிய இரண்டிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் சமையலை தாண்டி நகைச்சுவையால் ரசிக்க வைத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாரமும் பிரபல சமையல் கலைஞர்கள் தங்கள் கோமாளிகளுடன் இணைந்து நிகழ்ச்சியை தொடங்குவார்கள். இந்த அணிகளுக்கு அட்வான்டேஜ் டாஸ்க் 1 மற்றும் டாஸ் 2 ஆகிய இரண்டு போட்டிகள் கொடுக்கப்படும்.

பின்னர் சிறந்த போட்டியாளர்களுக்கு பாராட்டுகளும், மிதமான மார்க்குகளை எடுத்தவர்கள் எலிமினேஷனும் செய்யப்படுவர்கள்.  முன்னதாக ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். மூன்று சீசன்களை கடந்து விட்ட கோமாளி தற்போது மூன்றாவது சீசனின் இறுதியில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மீடூ விவகாரம்... லீனா மணிமேகலை தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரம்! நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

முதல் சீசன் 2020ல் கொரோனா ஊரடங்கு லாக்டவுன் நேரத்தில் மிகவும் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் சிறந்த மதிப்பு பெற்றது. தற்போது மூன்றாவது சீசனும் அதே அளவு ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கி மற்றும் புகழ், பாலா உள்ளிட்டோர் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். அதோடு குக்குகளுக்கும்  அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா அர்ஜுன், அம்மு அபிராமி, விதுலேகா ராமன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஷ் கருணாஸ், வேட்டை முத்துக்குமார், ரோஷினி ஹரிப்ரியன், சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், மனோபாலா, ராகுல் தாத்தா உள்ளிட்டோர் துவக்கத்தில்  கலந்து கொண்டனர். 

கோமாளிகளாக மணிமேகலை, கே பி ஒய் பாலா, சிவாங்கி ,சுனிதா, முகமது குரைஷி, சத்யராஜ் ,அருண் ஆகியோர் உள்ளனர்.முன்னதாக புகழ், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், புலி தங்கதுரை, சரத்ராஜ் உள்ளிட்டோரும் கலக்கி வந்தனர். கலகலப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அம்மு  அபிராமி, விதுல்யா ராமன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ் உள்ளிட்டோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் நிகழ்ச்சியின் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ருத்திகா முதலிடத்திலும், தர்ஷன் இரண்டாவது இடத்திலும், அம்மு அபிராமி மூன்றாவது இடத்தையும் பிடிப்பார்கள் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

TRP ரேஸில் விஜய் டிவியை ஓட ஓட விரட்டிய சன் டிவி... இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
Divya Bharathi : குட்டை ஸ்கர்ட்.. குட்டி சட்டை .. இடுப்பைக் காட்டி ஆளை மயக்கும் திவ்யபாரதி.. குவியும் லைக்குகள்!