
சமூக வலைத்தளங்களில் பி.ஜே.பி.க்கு எதிராக படு சுறுசுறுப்பாகவும் குறுகுறுப்பாகவும் இயங்கி வந்த, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்கிற குத்து ரம்யா திடீரென ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். அவருடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்பது மர்மமாக உள்ளது.
தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாத காலத்திற்கு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அண்மையில் அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் திவ்யா ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் 1970க்குப் பின் நிதிமந்திரி பதவி ஏற்றிருப்பதற்காக வாழ்த்துக்கூறி பதிவிட்டிருந்தார். அதனால் திவ்யா மீது காங்கிரஸ் கட்சியினர் பலர் கொந்தளித்தனர்.
இதற்கு பின்னரே அவரது ட்விட்டர் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அவரது பதிவுக்கு கட்சியினுள் கண்டனங்கள் எழுந்ததால் ட்விட்டரிலிருந்து வெளியேறினாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவிடம் கேட்ட போது, பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.