
இசைஞானி இளையராஜாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும், ஒரு சில அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துவரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பாரத் ரத்னா விருது தந்தே தீரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
ஜூன் 2 இன்று ராஜாவின் 76 வது பிறந்தநாள். வாட்ச் மேன்கள் வந்துவிடுகிறார்களோ இல்லையோ சரியாக காலை 7 மணிக்கு எப்போதுமே ஆஜராகிவிடுவார் ராஜா. ஆனால் அவரது ரசிகர்கள் இன்று அவரையும் மிஞ்சி, பூங்கொத்துக்கள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் காலை 6 மணியிலிருந்தே அவரது ஸ்டுடியோ வாசலில் கியூவில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதைக் கண்டு நெகிழ்ந்த ராஜா,”பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அது எது பற்றியது என்பதை, இன்று மாலை, இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில், நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில், சொல்வதாகவும் இளையராஜா கூறியிருக்கிறார். மேலும் இன்று 75-ஆவது பிறந்தநாள் காணும் இசைப்பெருங்கடல் இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் கூறினார். இளையராஜா ஆற்றிய பணிகளுக்கு 'பாரத ரத்னா' மாலை அணிவித்து மரியாதை செய்வதே சரியான அங்கீகாரமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
ராஜாவுக்கு ட்விட்டர் பதிவு போடுவதெல்லாம் மரியாதை செய்வதாகாது என்று கருதிய வி.சி.க.தலைவர் திருமாவளவன் தனது முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாத்துக்கு நேரில் ஆஜராகி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பத்திரிகையாளர்களிடம் நீண்ட நேரம் ராஜாவின் புகழ்பாடினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.