கடையை உடைத்து பணம் திருட்டு.. நடிகர் சூரி தம்பி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Published : May 21, 2025, 12:58 PM ISTUpdated : May 21, 2025, 01:02 PM IST
Soori Brother

சுருக்கம்

நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் தனது கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்று விட்டதாக அவர் மீது மதுரையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Actor Soori Hotel - சூரி நடத்தி வரும் உணவகம்

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வளர்ந்திருப்பவர் சூரி. அவர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக மதுரை நரிமேடு பகுதியில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை அவரது சகோதரர் லட்சுமணன் கவனித்து வருகிறார்.

வாகனம் நிறுத்துவதில் தகராறு

அதே பகுதியில் முத்துசாமி(55) என்ற நபர் ‘அலைகள்’ என்கிற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அம்மன் உணவகத்தின் உரிமையாளரான சூரியன் சகோதரர் லட்சுமணனுக்கும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முத்துசாமிக்கும், லட்சுமணனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லட்சுமணன் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துசாமி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அந்தப் புகாரில், எனது கடைக்கு கீழ்புறம் வணிகம் செய்து வரும் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் என்பவர் எனது அலுவலகத்தின் பொது நடை பாதையை ஆக்கிரமித்ததோடு, தான் அதை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எடுக்க மறுத்து வருகிறார். இது குறித்து தல்லாக்குளம் காவல் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். வீட்டு ஓனரிடம், ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு கூடுதல் பணம் தருகிறேன், மாடியில் இருப்பவரை காலி செய்து என்னிடம் கொடுங்கள் என்று எனக்கும் வீட்டு ஓனருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.

கடையை உடைத்து திருட்டு

மேலும் என் அனுமதி இல்லாமல் அத்துமீறி என் அலுவலகத்தின் பூட்டை உடைத்து எனது ஆவணங்களையும், சேமிப்பு பணத்தையும் பறிமுதல் செய்ததோடு, மாடிக்குச் செல்லும் பாதையையும் பூட்டி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முத்துசாமி மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சூரிக்கு தெரிந்து தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி நடத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை. அவர்களது தொழில் குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் அவரது சகோதரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?