கோலாகலமாக நடந்த காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... ரிஷப்ஷன், மேரேஜ் இரண்டிலும் மிஸ் ஆகாமல் பங்கேற்ற சிவகார்த்திகேயன்...!

Web Team   | Asianet News
Published : Dec 11, 2019, 12:59 PM ISTUpdated : Dec 11, 2019, 01:16 PM IST
கோலாகலமாக நடந்த காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... ரிஷப்ஷன், மேரேஜ் இரண்டிலும் மிஸ் ஆகாமல் பங்கேற்ற சிவகார்த்திகேயன்...!

சுருக்கம்

இன்று காலை இந்து முறைப்படி சதீஷ் - சிந்து திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிந்துவை கரம் பிடித்துள்ளார் சதீஷ். 

தமிழில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பல நாட்களாக சதீஷ்க்கு பெண் தேடி வந்த நிலையில், வைபவ் நடித்த "சிக்சர்" படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற சதீஷ் - சிந்து நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. நேற்று மாலை நடந்த ரிஷப்ஷனில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, சிபிராஜ், உதயநிதி ஸ்டாலின், கெளதம் கார்த்திக் உட்பட ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்றனர். 

இதையும் படிங்க: களைகட்டிய காமெடி நடிகர் சதீஷ் - சிந்து ரிஷப்ஷன்... வரவேற்பு நிகழ்ச்சியில் வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்...!

இன்று காலை இந்து முறைப்படி சதீஷ் - சிந்து திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிந்துவை கரம் பிடித்துள்ளார் சதீஷ். சொந்தங்கள் சூழ உற்சாகமாக நடைபெற்ற சதீஷ் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத திரைப்பிரபலங்கள் காலை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். ராதாரவி, மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அம்மாவுடன் பங்கேற்ற சிவகார்த்திகேயன், காலை நடந்த கல்யாணத்தில் மனைவியுடன் தவறாமல் கலந்து கொண்டார். திருமண உடையில் இருக்கும் சதீஷை சிவகார்த்திகேயன் செல்லமாக கிண்டல் செய்து புன்னகைக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!