
நேற்று மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ள ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு, நிஜத்தில் அதே ரஜினிக்கு எதிராக வில்லத்தனமான காரியம் ஒன்றில் இறங்கியுள்ளார். யெஸ் ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸாகும் அதே பொங்கல் தினத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படமும் ரிலீஸாகிறது.
கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, குட்டிக்குட்டிக் கேரக்டர்களைக் குறைத்துக்கொண்டு தற்போது காமெடி கலந்த கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறார்.
சென்ற வாரம் இவர் கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியானது. மே மாதம் வெளிவரவுள்ள இப்படத்தை தொடர்ந்து, ‘கூர்கா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். தான் ஹீரோவாக நடிக்கும் அந்த புதிய படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாகும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநாளில் தான் ரஜினியின் ’தர்பார்’ படமும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.