
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பான பஞ்சாயத்தால் நீண்ட நெடிய ரெஸ்ட் எடுத்து வரும் வடிவேலு மிக விரைவில் கமலின் ‘தேவர் மகன் 2’படத்தின் மூலம் அதிரடி ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளதாக வைகைப் புயலின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகர் வடிவேலு. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது காமெடிக்காட்சிகள் இடம்பெறாமல் இன்று வரை நாட்கள் நகர்வதே இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ட்ரெண்டிங் ஆன அவரது நேசமணி காமெடியத் தொடர்ந்து மீண்டும் எப்போது வடிவேலு நடிப்பார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்தது. அந்தக் கேள்விக்கு ‘விஸ்வரூபம்’படம் எடுத்தவர் மூலமே விரைவில் நல்ல பதில் கிடைக்கவிருப்பதாகத் தெரிகிறது.
’இனி படங்களில் நடிக்க மாட்டேன். முழு நேர அரசியல் தியாகம்தான் என்று அறிவித்த கமல் தற்போது ஒரே நேரத்தில் ‘இந்தியன் 2’,’தலைவன் இருக்கிறான்’ஆகிய இரு படங்களை அற்வித்திருக்கிறார். அடுத்து அவரது ‘தேவர் மகன் 2’படமும் கண்டிப்பாக இருக்கும் என்றே கமலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அப்படம் துவங்கும்போது ‘தேவர்மகன்’ முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த வடிவேலு கண்டிப்பாக இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இதுகுறித்து வடிவேலுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அவ்வளவு உற்சாகம் அடைந்தாராம். இன்னொரு பக்கம் இந்த காம்பினேஷன் அமைவதால் வடிவேலுவுக்கு இருந்த தடை நீங்குவதோடு, அப்படத்தை லைகா நிறுவனமே தயாரிப்பதால் பழைய பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.