தொடரும் பிக் டோஸ்கள்...சேரனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சித்தப்பு சரவணன்...

Published : Aug 04, 2019, 09:33 AM IST
தொடரும் பிக் டோஸ்கள்...சேரனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சித்தப்பு சரவணன்...

சுருக்கம்

கடந்த இரு வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹாட் டாபிக் இயக்குநர் சேரன் தான். அந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவது  ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ரொம்பவே நோகடித்துள்ளது. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் வந்த காரணத்தைச் சமீபத்தில் கூறிய சேரன், “பெரிய இயக்குநர், தேசிய விருது பெற்ற திரைப் பிரபலம் என்று என்னை குறிப்பிடுகின்றனர். 

கடந்த இரு வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹாட் டாபிக் இயக்குநர் சேரன் தான். அந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவது  ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ரொம்பவே நோகடித்துள்ளது. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் வந்த காரணத்தைச் சமீபத்தில் கூறிய சேரன், “பெரிய இயக்குநர், தேசிய விருது பெற்ற திரைப் பிரபலம் என்று என்னை குறிப்பிடுகின்றனர். ஆனால், என்னுடைய பிரச்சினை எனக்கு மட்டுமே தெரியும். ஆட்டோகிராஃப் மட்டுமே வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்கிய பல படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் நான்கு வருடங்களாக நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஆனால், அந்த காலவரைக்குள் சினிமா எங்கோ சென்றுவிட்டது. இதனால் இளைய சமுதாயத்தினருக்கு என்னை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

இதுதொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேசியபோதுதான், இந்த நிகழ்ச்சி குறித்து அவர் என்னிடம் கூறினார். அவர் சொல்லிதான் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினர் மனநிலையை நான் அறிய முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியிருந்தார்.

இளைய சமுதாயத்தின் மனநிலையை அறிய பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற சேரனுக்குத் தொடர்ந்து சக போட்டியாளர்களால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சரவணனுக்கும் சேரனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதில் சரவணன், சேரனை ஒருமையில் பேசியது அவரது அபிமானிகளை அதிருப்தியடையச் செய்தது. இதனால் சேரன் வெளியேற வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன்,இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்  உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் வைத்தனர்.

இப்படி சேரனுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பலரும் குரல்கொடுக்கும் நிலையில் பிக் பாஸ் கமல்ஹாசனும் சரவணனிடம், “ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கும், சேரனுக்கும் சின்ன ஒரு உரசல் இருக்கிறதே அது என்ன?” என்ற கேள்வியைக் கேட்டார்.அதற்குப் பதிலளித்த சரவணன், “அவர் ஓர் இயக்குநர், நான் ஒரு நடிகன்” என்று கூறினார். அடுத்தும் விடாமல் நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், நீங்கள் ஏன் சேரனை ஒருமையில் பேசினீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும்போது நான் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது இயக்குநர் சேரன் ஒரு உதவி இயக்குநர். அதனால் அவரை அப்படிப் பேச உரிமை உள்ளது என்று சரவணன் கூறியிருந்தார்.இதை நினைவுபடுத்திய கமல்ஹாசன், “உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அப்படிப் பேசக்கூடாது என்பதுதான் எனது கருத்து” என்றார். அதை ஏற்றுக்கொண்ட சரவணன், சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். அதற்கு, “நான் எப்போதும் உங்கள் முன்னால் ஓர் உதவி இயக்குநர்தான்” என்று சேரன் கூற, இருவருக்குமிடையே இருந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரவேண்டும் என்று ஒலிக்கும் குரல்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?