சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்! பிரச்சனையில் வெளிவந்த ரகசியம்!

Published : Aug 03, 2019, 07:33 PM IST
சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்! பிரச்சனையில் வெளிவந்த ரகசியம்!

சுருக்கம்

நேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் 'போடு ஆட்டம் போடு'  டாஸ்கில், விஜயகாந்த் போல் நடனம் மட்டுமே ஆடியதாகவும், மற்ற படி, அவர் விஜயகாந்த் போல் டாஸ்கில் இல்லை என சேரன் கூறியதற்கு, மிகவும் கோபமான சரவணன், நீங்கள் மட்டும் ரஜினி போலவா நடந்து கொண்டீர்கள் என கத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், இத்தனை நாள் சரவணன் தனக்கு சேரன் மீது இருந்த கோபத்தை கொட்டி தீர்த்து விட்டார்.

நேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் 'போடு ஆட்டம் போடு'  டாஸ்கில், விஜயகாந்த் போல் நடனம் மட்டுமே ஆடியதாகவும், மற்ற படி, அவர் விஜயகாந்த் போல் டாஸ்கில் இல்லை என சேரன் கூறியதற்கு, மிகவும் கோபமான சரவணன், நீங்கள் மட்டும் ரஜினி போலவா நடந்து கொண்டீர்கள் என கத்தினார்.

இதுகுறித்த விவாதம், போட்டியாளர்களுக்குள் வந்த போது, தலைக்கேறிய ஆத்திரத்தில்,  வாடா, போடா, என்பது வரை சண்டை முற்றியது. இதற்கு பதில் சொல்ல முடியாமல், தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார் சேரன்.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, இன்றைய தினம் இந்த பஞ்சாயத்து கமல் முன் வருகிறது. "கமலஹாசன் 'ஆரம்பத்திலிருந்தே உங்கள் இருவருக்கும் சிறிய உரசல் இருந்து வந்ததை நான் கவனித்து வருகிறேன். நான் உச்ச நட்சத்திரமாக இருந்த போது அவர் உதவி இயக்குனராக இருந்தவர், அதனால் அவரை திட்டும் உரிமை எனக்கு உண்டு என்று நீங்கள் கூறியதை கேட்டேன். என்னுடைய கருத்து என்னவெனில் அந்த உரிமை யாருக்கும் கிடையாது என்பதுதான் என்று கமல்ஹாசன் கூற, அதனை சரவணன் ஒப்புக்கொண்டார்.

இதைதொடர்ந்த்து சேரனை அவமதிப்பது போல் பேசியதற்காக, தன்னை மன்னித்து விடும்படி சரவணன் காலில் விழ துணிகிறார். இதற்கு சேரன் நான் எப்போதுமே உங்களுக்கு துணை இயக்குனர் தான் என அவருடைய மனதை தேற்றுகிறார். இதன் மூலம் இவர்களுடைய சண்டை தற்போது முடிவை எட்டியுள்ளது.

மேலும் சரவணன் முன்னணி நடிகராக இருந்த போது, சேரன் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது, பலருக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த ரகசியம் வெளிப்பட்டுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!