ஜே.கே.ரித்தீஷின் மனைவிக்கு கொலை மிரட்டல் ! நண்பர்களால் தொல்லை !!

Published : Aug 03, 2019, 09:37 PM IST
ஜே.கே.ரித்தீஷின் மனைவிக்கு கொலை மிரட்டல் ! நண்பர்களால் தொல்லை !!

சுருக்கம்

நடிகர் ஜே.கே.ரித்தீஷின் சொத்துக்ளை அபகரிக்கும் முயற்சியாக அவரது நண்பர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது மனைவி ஜோதீஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் எம்.பியும், அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு  ஏற்பட்டு காலமானார். 

ரித்தீஷின் மறைவுக்கு பிறகு அவரது மனைவிக்கு அவரது நண்பர்களால் நிறைய மிரட்டல் வருவதாக ரித்தீஷின் மனைவி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரித்தீஷின் நண்பரான பாவா என்பவர் ரித்தீஷ் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுவதாக சொல்லப்படுகிறது. 

அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்பிரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர். 

இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்பிரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர். இந்த சொத்தை வாங்குவதற்கு முன்பே ஜே.கே.ரித்தீஷ் இறந்து விட்டதால், சுப்பிரமணியிடம் கொடுத்த முன்பணத்தை ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கேட்டுள்ளார். 

இதற்கு அந்த பணத்தை ஜோதிஸ்வரியிடம் கொடுப்பதாக சுப்பிரமணியும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த 25 கோடி மதிப்பிலான சொத்தை ரித்தீஷின் நண்பரான ஆதம்பாவா அபகரிக்க முயல்வதாக ஜோதிஸ்வரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

மேலும் ரித்தீஷின் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியூர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜே.கே .ரித்தீஷின் பல கோடி சொத்துகளை அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் ஜே.கே.ரித்தீஷ் மனைவி கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்