”விஷ பாட்டில்” ஜனனி ஐயருக்கு பிக் பாஸில் கிடைத்திருக்கும் புது பெயர்...! காரணம் ஏன் தெரியுமா?

 
Published : Jun 19, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
”விஷ பாட்டில்” ஜனனி ஐயருக்கு பிக் பாஸில் கிடைத்திருக்கும் புது பெயர்...! காரணம் ஏன் தெரியுமா?

சுருக்கம்

co contestants named this artist as poison bottle

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, இந்த இரண்டாவது சீசனுக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பப்பட்டிருக்கும் போட்டியாளர்கள் விவரமும், கொஞ்சம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

பாடகர், சண்டை கலைஞர், காமெடி நடிகர், ரேடியோ ஜாக்கி, பிரிந்த தம்பதியர் என, வித விதமாக போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறது பிக் பாஸ். இவ்வளவு மெனக்கெட்டு பிக் பாஸ் செய்த தேர்வு தவறில்லை என்பதை நிரூபிக்கும் படி, மிகவும் கலகலப்பாக இருக்கிறது பிக் பாஸ் வீடு.

ஆனால் பிக் பாஸுக்கு கலகலப்பு மட்டும் போதாதே…! கொஞ்சம் கலவரமும் வேண்டுமே. அதற்கும் ஆள் இருக்கின்றனர். அதை நேற்றே மும்தாஜுக்கும் செண்ட்ராயனுக்கும் பிரச்சனையை மூட்டி விட்டு, நிரூபித்து காட்டி இருக்கிறார் பிக் பாஸ்.

 பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பொதுவாக நெட்டிசன்கள் தான் பெயர் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அங்கு இருப்பவர்களே பெயர் வைத்திருக்கின்றனர். ஜனனி ஐயருக்கு டேனியல் ”விஷ பாட்டில்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

அதுவும் ஜனனியின் முன்னிலையிலேயே அவரை விஷம் என கலாய்க்கின்றனர் பாலாஜியும், டேனியலும். இது விஷ பாட்டில் பார்க்க அழகா இருக்கும். சாப்பிட்டா அவ்வளவு தான். என பாலாஜி கூற அனைவருடனும் சேர்ந்து ஜனனியும் சிரிக்கிறார்.

மும்தாஜின் மருதமல பாட்டுக்கு தனியாக நடனமாடிக் கொண்டிருந்த பொன்னம்பலத்தை, மும்தாஜ் முன்னால் ஆட சொல்லி இருக்கிறார் ஜனனி. இதனால் தான் அவரை விஷம் என கலாய்த்திருக்கின்றனர், பாலாஜியும் டேனியலும். பெயர் வைத்ததெல்லாம் சரி இந்த விஷ பாட்டில் விஷயம் விவகாரமாக ஆகாமல் இருந்தால் சரி தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ