
கடந்த வருடம் நடைபெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆட்கள் மட்டும் தான் வேறு... இதை தான் பல ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் எப்போதும் போல், பிக்பாஸ் வீட்டில் வேலைகள் செய்வதற்காக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி (பாத்திரங்கள் கழுவும் குழு, வீட்டை சுத்தம் செய்யும் குழு, மற்றும் சமையல் செய்யும் குழு என மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டு) அவரவர்களுக்கான வேலைகளை இந்த வாரம் பிக்பாஸ் தலைவி ஜனனி பிரித்துக்கொடுத்தார்.
சமையல் செய்யும் குழுவில் நடிகை மும்தாஜும் இடம்பெற்றுள்ளார். இவர் டீ போட போகும் மும்பே... எல்லாருக்கும் தனி தனியாக டீ போட்டு கொடுக்க முடியாது. பால் டீ குடிப்பார்கள் என்றால் எல்லாருக்கு அது தான் போட்டு தரமுடியும். ஒருவேளை அவர்களுக்கு அது வேண்டாம் என்றால் அவர்களுக்கு ப்ளாக் காபி, அல்லது ப்ளாக் டீ போட்டு தரும் வரை கார்த்திருக்க வேண்டும் என கண்டிஷனாக கூறியுள்ளார்.
இவரின் இந்த அதிரடி பேச்சு, முரட்டு தனமாக உள்ளது என போட்டியாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.