கமல்,ரஜினி படங்களின் ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம் காலமானார்

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 11:11 AM IST
Highlights

’குரு சிஷ்யன்’,’உயர்ந்த உள்ளம்’ ‘திரிசூலம்’, ‘தையல்காரன்’,’வேலைக்காரன்’, ‘அதிசயப்பிறவி’’வாழ்க்கை’, ‘வணக்கத்துக்குரிய காதலியே’,’சங்கிலி’,’நல்லவன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டி.எஸ்.விநாயகம் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

துவக்கத்தில் ஆபரேட்டிவ் கேமராமேனாகப் பணியாற்றிய விநாயகம் இயக்குநர் திருலோகசந்தரால் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அ.திகபட்சமாக இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் 15 படங்களில் பணியாற்றினார். இதில் ரஜினி,கமல் படங்களும் அடங்கும்.

உடல்நலக்குறைவு காரணமாக சில வருடங்களாகவே திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்த விநாயகம் குன்றத்தூர் அருகே உள்ள தனது சொந்த கிராமமான பூந்தண்டலத்தில் வசித்துவந்தார்.அவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், ரவிராஜ், பார்த்திபன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

தகவல் கேள்விப்பட்டு திரையுலகப் பிரபலங்கள் அவரது சொந்த கிராமத்துக்கு விரைந்துவரும் நிலையில், நாளை புதன்கிழமை மாலை அவரது சொந்த கிராமத்திலேயே நல்லடக்கம் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!