அதிமுக அமைச்சர்கள் பண்ணிய இலவச விளம்பரத்தால் அள்ளு அள்ளுனு அள்ளிய சர்கார்... எவ்வளவு தெரியுமா?

By sathish kFirst Published Nov 13, 2018, 10:29 AM IST
Highlights

அதிமுக சர்கார் செய்த இலவச பிரமோஷனால் தமிழ் சினிமா வியாபாரத்தில் சர்கார்  முந்தைய சாதனைகளை முறியடித்து  190 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  

சர்கார் உலகம் முழுவதும் வெறும் 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதிலும் அதிமுக அமைச்சர்கள் பண்ணிய இலவச விளம்பரத்தால்  தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சர்கார் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இச்சாதனை சமீபத்தில் ரஜினி படங்கள் கூட செய்யாதவை.

சக போட்டியாளரான அஜித் களத்தில் இல்லாத நிலையில் தனியாக களமிறங்கிய விஜய் படம் , நியாயமான கட்டணத்தைப் போன்று இரு மடங்கு, மும்மடங்கு விலையில் சட்டத்துக்குப் புறம்பாக டிக்கெட் விற்கப்பட்டு வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சென்னை நகரில் 70 திரைகளில் சர்கார் 350 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் அனைத்தும் விநியோகஸ்தர்களால் மொத்தமாக எடுக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரத்தின் முதல் நாள் மொத்த வசூல் 2.40 கோடி இதில் 70 லட்ச ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் வாங்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு விநியோகப் பகுதியில் முக்கிய வசூல் சென்டராக விநியோக வட்டாரத்தில் குறிப்பிடப்படும் கோயம்பேடு, காஞ்சிபுரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள தியேட்டர்களில் குறைந்தபட்சம் 250 முதல் 1500 வரை தியேட்டர் நிர்வாகங்களால் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 500, 1000 ரூபாய், தூத்துக்குடியில் 300 ரூபாய், நாகர்கோவிலில் 600 ரூபாய், திருச்சியில் 250 ரூபாய் என அந்தந்த ஊர்களின் பொருளாதாரத் தன்மைக்கு ஏற்ப சர்கார் பட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் குறிப்பிட்ட மால் தியேட்டர்களில் மட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மால் தியேட்டரின் மொத்த டிக்கட்டையும் விநியோகஸ்தர்கள் வாங்கி இரு மடங்கு விலையில் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்த கூத்தும் சென்னையில் நடந்தது.

சர்கார் ரிலீஸ் செய்யப்பட்ட 90% தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகளில் நேரடியாக, மறைமுகமாக, சட்டத்துக்குப் புறம்பாக டிக்கெட் விற்பனை மூலம் வசூலான தொகை சுமார் 32 கோடி ரூபாய்.

சர்கார் திரைப்படத்திற்காக தமிழக மக்களும், விஜய் ரசிகர்களும் தீபாவளி அன்று செலவு செய்த தொகை சுமார் 50 கோடி. கார்ப்பரேட் நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட சர்கார் திரைப்படத்தின் வியாபார தகவல், தமிழ்நாட்டில் முதல் நாள் மொத்த வசூல் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்பே படத்திற்கு விளம்பரமாக மாறி வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக  அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வைத்தது. அதுவும் கூட படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்ததால் ஆறு நாளில் கொடிகளை அள்ளு அள்ளுன்னு அள்ளியது சர்கார்.  மேலும் இந்த படத்தில் இலவச மிக்சி, கிரைண்டரை எரிக்கும் காட்சியை அதிமுக அரசு நீக்க வைத்தது. இந்நிலையில் அதை கிண்டல் செய்யும் வகையில் சர்கார் வெற்றிக் கொண்டாட்ட கேக்கில் மிக்சி, கிரைண்டர் வைத்து அமைச்சர்களை கலாய்த்தும். அந்த கேக்கை விஜய்யை வைத்து வெட்டவிட்டு சர்கார் வெற்றியை  ஜாலியாக கொண்டாடினர். 

click me!