
மும்பையில் உள்ள சினிமா ஸ்டுடியோவில் பணக்கார தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மேற்கு கோரேகான் பகுதியில் அமைந்திருக்கும் சினிமா ஸ்டுடியோவில், பல்வேறு பாலிவுட் படங்களில் ப்ரீ புரோடுக்ஷன் மற்றும் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியே புகை மூட்டமாக மாறியது.
தகவல் அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடிவருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சினிமா ஸ்டுடியோவில் கொழுந்து விட்டு எரிந்த தீயின் வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.