
சோ ராமசாமி அக்டோபர் 5, 1934 வருடம் சீனிவாச ஐயர் , ராஜம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்து பின் , தன் வாழ்நாளில் பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர்.
துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியராக போராடி, எந்த ஒரு தவறையும் பயமின்றி எடுத்துரைத்த பத்திரிகையாளர்.
இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
சோ ராமசாமி சென்னையில் பிறந்து , இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார்.
பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார்.
இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். அது மாபெரும் வெற்றி பேரவே ரசிகர்கள் மனதில் சோ வாகவே நிலைத்து விட்டார்.
கலை வழக்கை:
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் 'பிக் விக்' என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியும், 200 திரைப்படங்களில் நடித்தும் உள்ளார் , மேலும் நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது .
விருதுகள்:
இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக, 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருது, வீரகேசரி விருது கொயங்கா விருது, நச்சிக்கேதஸ் விருது ஆகியவை பெற்றுள்ளார்.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
இப்படி பலரையும் ஆச்சார்யா படுத்தும் சகாப்தமாய், வாழ்ந்த 'சோ 'புவியில் மறைந்தாலும் பலரது மனதில் என்றும் நிலைத்து வாழ்வர், சோ வின் மறைவிற்கு நியூஸ் பாஸ்ட் யின் அஞ்சலி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.