ஜெ.வை தொடர்ந்து 'சோ'வுக்கும் குதர்க்கமான ட்வீட் - சர்ச்சையில் கமல்

First Published Dec 7, 2016, 3:16 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து டுவிட் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் கமலஹாசன், இப்போது மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மறைவுக்கு டிவிட் செய்து கண்டனத்தை பெற்று வருகிறார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திடீர் மாரடைப்பு காரணமாக நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு மறைந்தார். அவரின் அரசியல் தலைவர்கள், திரை உலக நடிகர் நடிகைகள், பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் நேர வர முடியாத சூழலில் நேற்று டுவிட்டரில்விடுத்த இரங்கல் செய்தி வெளியிட்டார். அந்த செய்தி அனைத்து தரப்பினரையும் எரிச்சலடையச் செய்தது. அவர்டுவிட்டரில் “ ஜெயலலிதாவை சார்ந்திருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குதர்க்கமாக வெளியிட்ட கருத்து அ.தி.மு.க. விசுவாசிகள் மட்டுமின்றி, சாமானிய மக்களையும் வெறுப்படையச் செய்துள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூப திரைப்படம் வெளியிடுவதில் மாநில அரசுக்கும், அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, உரசல் ஏற்பட்டது. அப்போது பேசிய நடிகர் கமலஹாசன், இந்ததிரைப்படத்தை திரையிடாவிட்டால் இந்த மாநிலம், நாட்டை விட்டே சென்றுவிடுவேன். என்னைச் சுற்றி நடக்கும் அரசியல் விளையாட்டை நினைத்து வேதனைப்படுகிறேன் என்று கடுமையாகப் பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, அரசை விமர்சித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட கருத்துக்கு, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீண்ட பதில் அளித்தார். இதனால், கமலுக்கும், ஜெயலலிதா தரப்பினருக்கும் இடையே ஒருவிதமான புகைச்சல் இருந்த கொண்ட இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்தி,தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார், ஆனால், நடிகர் கமலஹாசன் இறுதிச்சடங்குக்கு வராமல் டுவிட்டரில் மட்டும் இரங்கல் செய்தி அனுப்பினார். ஆனால், அந்த செய்தியான “ஜெயலலிதாவை சார்ந்திருப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசின்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் மூத்த பத்திரிகையாளரும், துக்ளக் வாரஇதழின் ஆசிரியரான சோ ராமசாமி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் கமல் வெளியிட்ட இரங்கல் செய்தும் குதர்க்கமாக அமைந்துள்ளது அனைவருக்கும் வேதனையை அடையச்செய்துள்ளது.

இரங்கல் செய்தியில், சோ ராமசாயின் பெயரைக் கூட, குறிப்பிடாமல், “ மதிக்கத் தக்க மற்றொரு நபர், நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த பத்திரிகையாளர் மறைவுக்கு கூட அவரின் பெயரைக் குறிப்பிடாமல், இரங்கல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!