சீட் நுனியில் உட்காரவைத்த சிட்டி என்ட்ரி ஸீன்! அதகளம் பண்ணும் 2.0 சிட்டி! தியேட்டரை அதிரவைக்கும் 3.0 சிட்டி...

By sathish kFirst Published Nov 29, 2018, 12:55 PM IST
Highlights

The World is Not only for Humans  இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. செல்போன் டவர்களால்  பறவை இனம் அழிந்துள்ளதை அவ்வளவு சிறப்பாக சொல்லியிருக்கிறார்.   

படத்தின் ஆரம்பத்திலேயே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. நம் வாசிகரனின் எண்ட்ரி, அவரின் உதவியாளராக இருக்கும் செஃஸியானா ஹார் ரோபோ எமி வசிகரனிடம் செல் போன் மயமானதை பற்றி பேசும் போது அவர் இதற்கு ஒரே ஆள் சிட்டி தான் என்று முதல் பாகத்தில் அழிந்த சிட்டியை மீண்டும் கொண்டு வருகிறார். ஆனால், சிட்டியையும் பறவை மனிதனான அக்சய் அழித்து விடுகிறார்.

அதன் பின்னர் அந்த தீய சக்தி எப்படி உருவானது என்பதை விவரிக்க அக்ஷேய் குமாரின் பிளாஷ் பேக் ஒன்று வருகிறது. அதன் பின்னர் அக்ஷேய் குமார் செல் போன் உருவத்தில் மாறி மாறி பல கொலைகளை செய்து வருகிறார். இதனை கட்டுப்படுத்த சிட்டிக்கு ரெட் சிப் பொருத்தி அக்ஷேய் குமாருடன் மோதவிடுகிறார் வசீகரன். இறுதியில் 2.0 சிட்டி அந்த தீய சக்தியை அழித்தாரா இல்லையா என்பதை பல மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் காண்பித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

மொபைல், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை அது எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்ற நல்லா கான்செப்டை தன் ஸ்டைலில் சொல்லி அசத்தியுள்ளார். அதிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாரு ஆரோ, பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று கூறி எளிதில் மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார்.!

சரி நம்ம சிட்டி என்ன பண்றாரு? சிட்டி எண்ட்ரீ கொஞ்சம் எழுந்து உட்கார வைத்தது, அதை தொடர்ந்து 2.0 சிட்டி அதகளம் செய்ய, 3.0 சிட்டி வர தியேட்டரே அதிருது. இடைவேளைக்கு பிறகு  அக்‌ஷய் குமார் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. வயதான கதாபாத்திரம் என்பதால் ஜெயபிரகாஷ் வாய்ஸும் அப்படியே பொருந்தி நிற்கின்றது.

எமி ஜாக்ஸன் வெறுமென வந்துபோகும் கதாபாத்திரம் தான் பெரிதாக ஒன்றுமில்லை, படத்திற்காக உழைத்த கிராபிக்ஸ் டீமை எழுந்து நின்று பாராட்டலாம், அதுவும் 3டி டெக்னாலாஜியின் டைட்டில் கார்டிலேயே நம்மை இழுத்து விடுகின்றனர், கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என அட இது தமிழ் படம் தானா, இல்லை ஹாலிவுட் படத்திற்கு வந்துவிட்டமோ என்று எண்ண வைக்கின்றது. இப்படி படம் முழுவதும் பிரமாண்டாம், காட்சிக்கு காட்சி ஆச்சரியம் என்று இருந்தாலும், ஷங்கரின் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள் மாறவே இல்லை, அதாவது வித்தியாசமாக ஒருவரை கொலை செய்வதில் அவருக்கு அப்படி என்ன ஆசையோ, இந்தியன், அந்நியன், ஐ-யை தொடர்ந்து இதிலும் தொடர்கின்றது. 

பிறகு என்ன சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ஸ்டைலில் விளையாண்டுள்ளார். அக்‌ஷய்குமார் கஷடமான மேக்கப் போட்டும் அவர் காட்டிய மிரட்டல் எக்‌ஷ்பிரஷன். படத்தில் வரும் குட்டி குட்டி வசனம், மனுஷனுக்கு தற்போது தேவை டிவி, சினிமா, சாப்பாடு, மொபைல், நாலும் பேருக்கு நல்லதுனு எதுவுமே தப்பில்லை என்று ரஜினியிடமே ரோபோ சொல்வது என சுவாரஸ்யம் தான். படம் முடிந்ததும் மொபலை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு வகை எண்ணத்தை நமக்கே தோன்ற வைத்த ஷங்கரின் இந்த பாசிட்டிவ் எனர்ஜியே 2.0 விட 3.0 மீது எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது.

click me!