இது வெறும் ஹாலிவுட்டின் விட்டலாச்சார்யா படம் தான்! ஜேம்ஸ் கேமரூன் லெவல் இல்ல... இண்டர்வல் கேப்பில் புலம்பும் ரசிகர்கள்

By sathish kFirst Published Nov 29, 2018, 11:10 AM IST
Highlights

'பாகுபலி' படத்தையே பார்த்து பிரமித்த நமக்கு அதைவிட பன்மடங்கு பிரமிப்பை இந்தப் படம் தரும். குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம். அனால், இது வெறும் விட்டலாச்சார்யா  படம்  தான், ஜேம்ஸ் கேமரூன் படத்தை நெருங்கள் கூட முடியாது என ரசிகர்கள் இண்டர்வல் கேப்பில் பேசுவதை மறுக்கமுடியாது.

ஆமாம், டாக்டர்களிடமும், வக்கீல்களிடமும் சொல்லக்கூடாத ஒரே வார்த்தை எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, அது அவங்களுக்கு மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கருக்கு தான் போல, மனுஷன் காச தண்ணியா கரைச்சி இருக்காப்ல.

லைகா நிறுவனம் தலையில்  600  கோடி ரூபாய்க்கு மிளகாய் வாங்கி அறைத்து, பேருக்கு ரஜினிகாந்த் , ஹிந்திக்கு அக்ஷய் குமார் , ஹாட்க்கு எமிஜாக்சன்  என தனக்கே உரிய ஸ்டைலில்  படம் எடுப்பதாக நினைத்து  2.ஓ எடுத்துள்ளார்.  இன்று அதிகாலை உலகம் முழுவதும் சுமார் 10000  திரையறுக்குகளில் வெளியானது. படத்தைப்பற்றி டுவிட்டரில் பல்வேறு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். பாதிப் படம் முடிந்ததும் இண்டர்வல் கேப்பில் ரசிகர்கள் பேசிக்கொண்டதை தற்போது பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் என்பதால் இளைஞர்கள் மட்டுமில்லாமல், பெண்கள், குழந்தைகள், வயதானோர் என அதிகாலை நான்கு மணிக்கே தியேட்டரில் காண முடிந்தது. இது பழையகாலத்து மாயாஜால வித்தை காட்டும் விட்டலாச்சார்யா படம் தான். அதை ஹாலிவுட் ஸ்டாலில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜேம்ஸ் கேமரூன் படத்தை நெருங்கள் கூட முடியாது. ஏன் நம்ம ஊரு பிரமாண்ட ஷங்கர் ஹாலிவுட் ஸ்டைலில் மாயாஜால பேய் படத்தை இயக்கியிருக்கிறார் என ரசிகர்கள் இண்டர்வல் கேப்பில் பேசுவதை மறுக்கமுடியாது.

சப்பை கண்டெண்ட்கு இவ்வளோ பெரிய பொருட்செலவு தேவை இல்லாத ஆணி தான். வெறும் பிரம்மாண்டம் மட்டும் போதாது ஷங்கர் சார், கதையிலும் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம் என கருத்து வேற...

click me!