
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இன்று, பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் 2.0 இந்த படத்தை வரவேற்கும் வகையில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ரசிகர்களும் ஆரவாரத்தோடு கண்டு களித்து வருகிறார்கள்.
சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கதையின் திரையோட்டத்தில் பெரிதாக கண்டு கொள்ளும் விதத்தில் அது இல்லை என்றும், 3 டி தொழில் நுட்பத்தில் இயக்குனர் ஷங்கர் பிரமிக்க வைத்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஷங்கர் பேசும் போது அவரிடம், 2.0-வை தொடர்ந்து அடுத்த பாகம் எடுக்க படுமா என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த ஷங்கர், கண்டிப்பாக 3.0 எடுக்கும் ஒரு எண்ணம் உள்ளது. அது பற்றிய கருக்களத்தை யோசித்து வருகிறேன் என கூறினார்.
ஆனால் அடுத்த பாகத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அது சத்தியம் என்றும், காரணம் இந்த கதையின் மிக முக்கிய கருவான சிட்டியை தவிர வேறு யாரையும் இந்த கதையில் வைத்து கற்பனை கூட செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.