முன்பே வைரமுத்து பற்றி சொல்லி இருந்தால் இப்படித்தான் ஆகியிருக்கும்! புகைப்படம் வெளியிட்ட சின்மயி!

Published : Dec 21, 2018, 05:48 PM IST
முன்பே வைரமுத்து பற்றி சொல்லி இருந்தால் இப்படித்தான் ஆகியிருக்கும்! புகைப்படம் வெளியிட்ட சின்மயி!

சுருக்கம்

#Me Too  பிரச்சினையில் பாடகி சின்மயி சிக்கியபோது, அவரை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஒரு ட்விட்டை ஷேர் செய்து பதில் கொடுத்துள்ளார் சின்மயி.

#Me Too  பிரச்சினையில் பாடகி சின்மயி சிக்கியபோது, அவரை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஒரு ட்விட்டை ஷேர் செய்து பதில் கொடுத்துள்ளார் சின்மயி.

ஹோலிவுட்டில் பிரபலமான #Me Too - வை கோலிவுட்டில் பிரபலமாக்கிய பெருமை பாடகி சின்மயியைத்தான் சேரும். இதற்கு காரணம் இவர் புகார் கூறிய நபர் என்று கூட கூறலாம்.

கோலிவுட் திரையுலகமே, கவிதைகளின் ஆசானாக பார்க்கும் கவிஞர் வைரமுத்து, வெளிநாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தார் சின்மயி. இவரை தொடர்ந்து லீனா மணிமேகலை, ஸ்ரீரஞ்சனி என தொடர்ந்து இயக்குனர்கள், மற்றும் நடிகர்கள்  மீது  மீடூ புகார்கள் குவிந்தது. இதானால் தமிழ் திரையுலகமே பரபரப்பில் ஆழ்ந்தது. 

இதனால் சிலர்  சின்மயிடம், இந்த சம்பவம் அரங்கேறி 14  ஆண்டுகளுக்கு பின் இதை ஏன் கூறவேண்டும்?  அப்போதே கூற வேண்டியது தானே என கேள்விகளை முன்வைத்தனர். மற்றொரு தரப்பினர் சின்மயி பிரபலம் ஆவதற்காக வைரமுத்து மீது பழி சுமற்றுவதாக தெரிவித்தனர். 

 சின்மயி கூறிய புகாரை முற்றிலும் மறுத்த கவிஞர் வைரமுத்து. இந்த புகார் தொடர்பாக முறையாக நீதி மன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது சின்மயி அவருடைய ட்விட்டர் பக்கத்தில்  ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு "ஏன் அப்பவே அடிக்கலன்னு கேட்ட நல் உள்ளங்களுக்கு" என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது  டெல்லியை சேர்த்த ஒரு இளம் பெண் தன்னிடம்,  தவறாக  நடந்து  கொண்ட ஒருவரை தாக்கியுள்ளார்.  இதனால் அந்த ஆண், இந்த பெண்ணை திருப்பி அடித்த போது, அந்தப் பெண்ணின் கண்  கருவிழிகள் பாதிப்படைந்து விட்டதாம். 

 

இதன் மூலம் சின்மயி சொல்ல வருவது என்னவென்றால்,  ஒருவேளை அப்போதே தன்னிடம் தவறாக நடந்துகொண்டவரை நானும் தாக்கி இருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும் என சின்மயில்  சொல்லாமல் சொல்லியுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!