
அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா தன்னுடைய 50 - வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஹன்சிகா, காவி உடை அணிந்தவாறும், கஞ்சா பிடிப்பது போன்றும்... இவருக்கு அருகில் சில சாமியார்கள் அமர்ந்திருப்பது போன்றும் பின்புறம் காசி இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என கூறி ஏற்கனவே பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இந்த போஸ்டர் குறித்து வாணியம்பாடி பகுதியில் ஒருவர் போலீசாரிடமும் புகார் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த, நாராயணன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில் இந்து மதம் மற்றும் பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில் ஹன்சிகா புகைப்பது போன்று உள்ளதாகவும் எனவே இந்தப் படத்தில் நடித்த ஹன்சிகா மற்றும் இந்த படத்தின் இயக்குனர் ஜமீல் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.