
metoo ஹாஷ்டாக் மூலம் திரையுலகத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும், பாடகி சின்மயி தன்னுடைய அம்மாவின் சங்கீத வாழ்க்கை பாழானது ஒரு பெரிய சங்கீத வித்வானால் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி ஈடு இணையில்லா கவிஞர் என பெயர் எடுத்த வைரமுத்து மீது, பாலியல் புகாரை முன்வைத்த பின் பல பெண்கள் தொடர்ந்து அவர் மீது பாலியல் புகார் கூற துவங்கினர்.
இந்நிலையில் இவர் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில், பாடகி சின்மயி, "கர்னாடக சங்கீத உலகிலும் இது போன்ற பாலியல் தொல்லைகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அதனால் தான் பல பெண்கள், இசை பயிற்சியையும், பாரத நாட்டியதையும், மிருதங்கத்தையும் விட்டு விலகி விட்டதாக கூறி உள்ளனர். மேலும் இது போல் தங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் என் அம்மாவின், சங்கீத வாழ்க்கை ஒரு பெரிய வித்வானால் பாழானது. 90 களில் எப்படியெல்லாம் அதிகார வட்டாரத்தில் எப்படி அச்சுறுத்த முடியும் என பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
தன்னுடைய அம்மா ஒரு ஆவணப்பதை எடுத்தார். அனால் அதை என் அம்மா அவர் எடுத்ததாக வெளியில் சொல்ல கூடாது என அதிகாரத்தில் இருந்த வித்வான் மிரட்டினார். இதற்க்கு என் அம்மா ஒப்புக்கொண்டதால் அவரின் சங்கீத வாழ்க்கை பாழானது.
தன்னுடைய அப்பாவிடம் இருந்து அம்மா விவாகரத்து பெற்ற பின் தங்களின் குடும்ப செலவிற்காக 500 ரூபாய் மட்டுமே கொடுப்பார். அதனை வைத்து பல்வேறு சிரமங்களுக்கு நடுவே வாழ்த்தோம். தன்னுடைய பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல், 10 வகுப்போடு படிப்பை நிறுத்து விட்டு வேலை செய்துகொண்டே தொலைத்தூர கல்வியின் மூலம் படித்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.