ஒரு குற்றவாளியைப் பார்த்து நல்லவர்னு சொல்றீங்களே? குஷ்பூவை வெளுத்து வாங்கிய சின்மயி…

Published : Oct 26, 2018, 11:39 AM IST
ஒரு குற்றவாளியைப் பார்த்து நல்லவர்னு சொல்றீங்களே? குஷ்பூவை வெளுத்து வாங்கிய சின்மயி…

சுருக்கம்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், நடிகை குஷ்பூ , வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்மயி,  குற்றவாளியைப் பாதுகாக்கும் வகையில் அவர் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  

பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த பிரச்சினை சமூக வலைத்தளங்களில் விவாதமாகவும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பு  அண்மையில்  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது சின்மயி புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த குஷ்பு, ‘‘இந்த பிரச்சினை குறித்து சின்மயி பாடகர் சங்கத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.. எனது வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் வைரமுத்து கண்ணியமான மனிதர்களில் ஒருவர் என்றும் குஷ்பூ தெரிவித்தார்.

இது சின்மயிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ‘‘நான் என்ன செய்ய வேண்டும். எப்போது பேசி இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. ஆதாரப்பூர்வமாக 3 பெண்கள் பத்திரிகையாளர்கள் முன்பு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை அடையாளப்படுத்தி இருக்கிறோம். அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்’’ என்று குஷ்பூவுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த குஷ்பு, ‘‘நான் எப்போதும் உங்களை ஆதரிக்கிறேன். ஆனால் எனது நியாயமான கேள்விகள் அப்படியேதான் இருக்கின்றன’’ என்றார். இதற்கு மீண்டும் பதில் அளித்து சின்மயி ‘‘சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 15–க்கும் மேற்பட்ட புகார்கள் நீதிமன்றத்தில் உள்ளன.

புகார் கொடுத்த ஒரு பெண் டப்பிங் கலைஞரை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர். அந்த பெண்ணுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எப்போதோ நான் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசாமல் இப்போது நான் பேசி இருப்பதை கவனியுங்கள். அன்பார்ந்த சமூகமே குற்றவாளிகளை பாதுகாப்பதை நிறுத்துங்கள் என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.’

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ
சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!