வைரமுத்து பாடலை நேற்று பாடிய சின்மயி..! #metoo க்கு மத்தியில் இப்படி ஒரு சலசலப்பு..!

Published : Oct 15, 2018, 11:49 AM IST
வைரமுத்து பாடலை நேற்று பாடிய சின்மயி..! #metoo க்கு மத்தியில் இப்படி ஒரு சலசலப்பு..!

சுருக்கம்

பாடகி சசின்மயி, வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ள இந்த நிலையில், தனியார் வணிக வளாக நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வைரமுத்து எழுதிய பாடலை பாடி  அனைவரையும் அதிர வைத்து உள்ளார்   

பாடகி சசின்மயி, வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ள இந்த நிலையில், தனியார் வணிக வளாக நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வைரமுத்து எழுதிய பாடலை பாடி அனைவரையும் அதிர வைத்து உள்ளார் 

ஒரு பக்கம் #metoo ஹேஸ் டேக் மூலம் நாடறிய செய்த பாலியல் புகார் குறித்த விழிப்புணர்வு ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வைரமுத்து எழுதிய பாடலை பாடி சற்று கடுப்பேற்றி உள்ளார் சின்மயி என பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று  பாடல் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இருவரும் பங்கேற்று பாடல்களை அசத்தினர் 

திரைத்துறையில் சின்மயி முதன்முதலில் பாடிய பாடல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’.படத்தில் இடம் பெற்ற அவர் பாடிய பாடலான ‘ஒரு தெய்வம் தந்த பூவே’. இந்த பாடல் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்தார் சின்மயி. அதன்பின்னர் தற்போது வாழ்வில் மென்மேலும் பல உச்சத்தை அடைந்த சின்மயி தற்போது தான் வைரமுத்து பற்றி பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.அவர் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என அவரே தெரிவித்து உள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!
மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்