
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை கடந்த ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பெற்றார். அவரை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருதை சிவாஜிகணேசன், லதா மங்கேஸ்கர், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர், தமிழிசையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்... "நடிப்பிலும், நாட்டின் நடப்பிலும் அக்கறை கொண்ட சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது....
எனது வாழ்த்துகள்.... என கூறியுள்ளார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி, அன்புமணி ராம்தாஸ்... "இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்! என குறிப்பிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.