
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்று முன் அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசன்.. ரஜினிகாந்துக்கு இந்த விருது 100 சதவீதம் பொருத்தம் என, ட்விட் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை கடந்த ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பெற்றார். அவரை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருதை சிவாஜிகணேசன், லதா மங்கேஸ்கர், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு... இந்த விருது கிடைத்தது குறித்து, உலக நாயகன் கமல்ஹாசன், தனது டுவிட்டரில் தாதாசாகிப் பால்கே விருது ரஜினிக்கு கிடைத்தது 100% பொருத்தம் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்". என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.