
உலகநாயகன் கமலஹாசன் இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், தன்னுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
1954ஆம் ஆண்டு பரமக்குடியில் இதே நாளில் பிறந்தவர்தான் நடிகர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய 5 வயதில், நடிக்க துவங்கி சுமார் 62 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அசத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
மேலும் செய்திகள்: Happy Birthday Kamal Haasan: 67-வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள் இதோ!
தன்னுடைய 5 வயதில் 1959 இல் வெளியான, 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடித்த இவர், இந்த படத்திற்காக 6 வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதியின் கைகளால் பெற்றார். குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து விட்டாலும், தன்னை ஹீரோவாக மெருகேற்றிக் கொள்ள இவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பல போராட்டங்களைக் கடந்துதான் திரையுலகில் சோபிக்க துவங்கினார்.
மேலும் செய்திகள்: 'டாக்டர்' பட வெற்றியால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!! அடேங்கப்பா... இத்தனை கோடியா?
மேலும் திரையுலகில் இவர் போட்டு நடித்திராத வேடமே இல்லை என்னும் அளவிற்கு பல வேடங்களிலும் நடித்துவிட்டார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து சுமார் 19க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். விஸ்வரூபம் படத்திற்காக சிறந்த தயாரிப்பாளரான தேசிய விருதையும் வென்றுள்ளார். மேலும் மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பெண்ணா... இல்லை தேவதையா? மஞ்சள் நிற சல்வாரில்... இளம் நெஞ்சங்களை அலைபாய விட்ட அதிதி ஷங்கர்!!
திரையுலகில் தன்னை ஒரு நடிகராக மட்டுமே வெளிக்காட்டி கொள்ளாமல், சிறந்த பரதநாட்டியக் கலைஞர், பாடகர், இயக்குனர், தொழில்நுட்ப வல்லுனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், மேக்கப் கலைஞர் என இவர் தொட்ட சில துறைகளும் உண்டு. இந்தமகா கலைஞன் இன்று 67-வதுபிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Anushka: வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்... பெற்றோருக்கு அனுஷ்கா போடும் ஒரே கண்டிஷன் இது தான்?
திரைத்துறையை தவிர்த்து தற்போது அரசியலிலும் களம் கண்டுள்ள கமலஹாசன், தன்னுடைய 'மக்கள் நீதி மையம்' கட்சியின் மூலம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றாலும், அடுத்தடுத்து மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "இந்திய திரை உலகின் மிகச் சிறந்த நடிகரும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான, அன்பு நண்பர் 'கலைஞானி' கமலஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணியை தொடர்ந்திட வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.