கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படத்தை பாருங்க, கட்சி உறுப்பினர்களிடம் கூறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு;

 
Published : May 26, 2018, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படத்தை பாருங்க, கட்சி உறுப்பினர்களிடம் கூறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு;

சுருக்கம்

chief minister appreciates Tamil actress

கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்திரி தேவியாக நடித்த திரைப்படம் நடிகையர் திலகம். இத்திரைப்படம் தெலுங்கில் ’மகாநடி’ என்னும் பெயரில் ரிலீசாகியது.

உலகெங்கிலும் இந்த மகாநடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பாராட்டதவர்களே இல்லை.

தங்கள் மனம் கவர்ந்த நடிகையான சாவித்திரி தேவியை, திரையில் தங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதற்காக, கீர்த்தி சுரேஷை பல திரைத்துறை பிரபலங்களும் பாராட்டியிருந்தனர்.

நேற்று ஆந்திராவில் விஜயவாடாவில் வைத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ’மகாநடி’ படக்குழுவை பாராட்டி பேசினார்.

மேலும் அவர் சாவித்திரி தேவியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், இத்திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோரையும் பாராட்டி பேசினார்.

ஆந்திராவில் சாவித்திரி தேவிக்கு ரசிகர்கள் மிக அதிகம். இன்றளவும் அவர் பெயரை சொன்னாலே அவர்கள் ’மகாநடி’ என கூறி பெருமூச்சு விடுகின்றனர். அதனாலேயே தமிழகத்தை விட ஆந்திராவில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தை பார்க்கும்படி தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!