நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எப்பதான் எண்ணச்சொல்லுவீங்க மைலார்ட்?...

Published : Jul 29, 2019, 03:04 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எப்பதான் எண்ணச்சொல்லுவீங்க மைலார்ட்?...

சுருக்கம்

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் என்று நடந்ததும் அதன் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்கிற தகவல் கூட தெரியாத நிலையில், உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் என்று நடந்ததும் அதன் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்கிற தகவல் கூட தெரியாத நிலையில், உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர், தொழில்முறை அல்லாத உறுப்பினர் என இரண்டு வகையான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆயுட்கால உறுப்பினர், தற்காலிக உறுப்பினர் என இரண்டு வகைகள் உண்டு. மொத்தம் 4 வகையான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.தொழில்முறை உறுப்பினர்களுக்கு தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இவர்களில் 61 ஆயுட்கால தொழில்முறை உறுப்பினர்கள் தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இவர்களில் பெரும்பாலானோர் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள்.

குறிப்பாக விஷால், நாசர் அணி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பதிவாளருக்கு மாற்றப்பட்ட உறுப்பினர்கள் சார்பில் புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில் நடிகர் சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை நீக்கியது குறித்து விளக்கம் கேட்டு தென் சென்னை சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த ஜூன் 17-ந்தேதி நாசர், விஷால் அணி சார்பில் பதிவாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் சங்கத்துக்கு நடக்க இருந்த தேர்தலை நிறுத்துமாறு ஜூன் 19-ந்தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்காக பதியப்பட்டு தேர்தலை நடத்தலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடத்தப்பட கூடாது என்றும் உத்தரவு வந்தது. இதன்படி ஜூன் 23-ந்தேதி நடந்த தேர்தலுக்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதற்கிடையே நடிகர் சங்கத்தில் இருந்து 61 ஆயுட்கால உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றிய விவகாரத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகள் எண்ணுவதற்கான தேதியை நீதிமன்றம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!