’ஆடை’படத்தில் பாதி சம்பளம் வாங்கியிருந்த அமலா பால், ரிலீஸ் சமயத்தில் உதவுவதற்காக அதையும் திருப்பிக்கொடுத்த நிலையில் தற்போது பேங்க் பேலன்ஸ் எதுவுமின்றி மிகப் பரிதாபமான நிலையில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’அதோ அந்தப் பறவை போல’தவிர்த்து சமீபகாலமாக அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவரும் அமலா பால்’ஆடை’படத்தை மலைபோல் நம்பியிருந்தார். ஃபைனான்ஸ் பிரச்சினையால் ஒரு நாள் தாமதமாக ரிலீஸான அப்படத்திற்கு தன் கைவசமிருந்த ரூ.30லட்சம் பணத்தைக் கொடுத்து உதவும் அளவுக்கு அப்படத்தின் வெற்றி மீது நம்பிக்கையிருந்தது. ஆனால் முதல் நாளை ஓப்பனிங் வசூலை இழந்த அப்படம் பெண்கள் கூட்டம் தியேட்டர் பக்கம் வராததால் கொஞ்சம் கூட பிக் அப் ஆகவே இல்லை. மொத்தம் சுமார் 3 கோடியில் உருவான இப்படம் பாதி வரை கூட வசூலிக்கவில்லை என்பதே தியேட்டர் உரிமையாளர்களின் வாக்குமூலம்.
இந்நிலையில் தனக்கு படத்திலிருந்து வரவேண்டிய சம்பள பாக்கி 20 லட்சம், ரிலீஸுக்கு உதவிய பணம் 30 லட்சம் என்று ‘ஆடை’படத்துக்காக மட்டுமே 50 லட்சம் இழந்து தவிக்கும் அமலா பாலிடம் வங்கியில் சுத்தமாகப் பணமே இல்லையாம். இதற்கு முன் சம்பாதித்த பணத்தில் கேரளாவில் ஏகப்பட்ட நிலங்களை வாங்கிக் குவித்த அமலா பால் தற்போது நிர்கதியாக நிற்கிறாராம். இன்னொரு அதிர்ச்சியாக ‘ஆடை’பட ரிலீசுக்குப்பின் கதை சொல்வதற்காக ஒரு இயக்குநர் கூட அவரைத் தொடர்பு கொள்ளவில்லையாம்.