MeeraMithun: விடாது கருப்பாய் மீரா மிதுனை துரத்தும் வழக்கு..! மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன்..!

By manimegalai aFirst Published Dec 4, 2021, 5:20 PM IST
Highlights

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட மீரா மிதுனை (meera mithun) டிசம்பர் 17 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கில் ஆஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட மீரா மிதுனை டிசம்பர் 17 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கில் ஆஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடிகையும், சூப்பர் மாடலுமான மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவானார். இதை தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர் பதுங்கி இருந்ததை அறிந்த தமிழக காவல் துறையினர், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை ஆகஸ்ட் 14 ம் தேதி சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்... பின்னர் தன்னுடைய தவறுக்காக, மன்னிப்பும் கேட்டார். இவரை தொடர்ந்து, இவரது நண்பர் ஷாம் அபிஷேக் என்பவரையும் போலீசார் மீரா மிதுனின் அவதூறு கருத்துக்களை பரப்பும் வீடியோ எடுத்ததற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்: Vijayakanth: போடுடா வெடிய... மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறாரா கேப்டன் விஜயகாந்த்? செம்ம மாஸ் தகவல்!

 

பல முறை தன்னுடைய ஜாமீனுக்காக போராடி வந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருவரும், பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கபட்டனர். இந்த கைது விவகாரத்திற்கு பிறகு ஆள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வரும் மீரா மிதுனுக்கு, தற்போது மீண்டும் டிசம்பர் 17 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Biggboss Priyanka: சின்ன வயசுலேயே செம்ம அழகு... வைரலாகும் பிக்பாஸ் பிரியங்காவின் போட்டோ!

 

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 17 ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவருடைய நம்பர் ஷாம் அபிஷேக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுளள்து. வாயை விட்டு சிக்கிய மீரா மிதுனை இந்த விவகாரம் தற்போது விடாது கருப்பாய் சுற்றி வருகிறது. அதே நேரத்தில் பலரை தன்னுடைய பேச்சால் டென்ஷன் செய்து வந்த மீரா மிதுன் கைது நடவடிக்கைக்கு பின்னர் அடங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

 

click me!