
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த, சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. சந்திரமுகி 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வடிவேலுவை தவிர முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் நடிக்கவில்லை.
சந்திரமுகி என்கிற கருவை மட்டுமே மையமாக வைத்து கொண்டு, புதிய கான்செப்டில், அதாவதை வேட்டையனை பிரதான கதாபாத்திரமாக மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பி.வாசு. மேலும் வடிவேலுவின் கேரக்டரை மையமாக வைத்து இந்த இரண்டு கதைக்குமான கனெக்ஷனை கொடுத்துள்ளதாக இயக்குனர் பி வாசு சமீபத்தில் ஆடியோ லாஞ்சில் கூறி இருந்தார். இந்த படத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். அதேபோல் சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
Jawan Box Office: ஹிஸ்டாரிக் காலெக்ஷன்.! முதல் நாளே பாலிவுட் திரையுலகை அதிர வைத்த 'ஜவான்' பட வசூல்!
லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் என கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. 'சந்திரமுகி 2' படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்படத்தின் ரிலீசை படக்குழு தள்ளி வைத்துள்ளது. மேலும் இந்த படத்தை செப்டம்பர் 28-ந் தேதி வெளியாகும் என்பதை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.