"நாங்க எப்பவுமோ அடங்கித்தான் போகனுமா?"... டாப்ஸி பட டிரெய்லரை பார்த்து கொதித்தெழுத்த ஸ்மிருதி இரானி...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 12, 2020, 5:39 PM IST
Highlights

அதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் பிரபலமான சந்த்ரோ தோமா, பிரகாஷி தோமா ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் "சான்த் கி ஆங்க்' என்ற இந்தி படத்தில் 60 வயது மூதாட்டியாக நடித்து அசத்தினார். 

இதையும் படிங்க: சனம் ஷெட்டியை தர்ஷன் கழட்டிவிட காரணம் இதுதான்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

இதனையடுத்து அனுபவ் சின்ஹா தயாரித்துள்ள  தப்பாட் படத்தின் முதல் ட்ரெய்லர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பியது. மார்டன் இன்டர்நெட் காலத்திலும்  ஆணாதிக்கம் தொடர்கிறது என்பதை அனைவரது நெத்தி பொட்டிலும் அடித்து சொல்கிறது டிரெய்லர். 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...! 

இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் நேற்று வெளியானது. அதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் உங்களில் எத்தனை பேர் ஏழை வீட்டு பெண்கள் மட்டும் தாக்கப்படுகிறார்கள் என நினைக்கிறீர்கள்?, படித்தவர்கள் பெண்களிடம் கை ஓங்க மாட்டார்கள் என எத்தனை பேர் நம்புகிறீர்கள்? எங்களுக்கும் அனைத்து கொடுமைகளும் நடந்துள்ளது. பெண்கள் என்றால் பொறுத்து போக வேண்டுமா? இதை எத்தனை பெண்கள் உங்கள் மகள் மற்றும் மருமகளிடம் கூறியிருப்பீர்கள் என்று கொந்தளிப்பாக பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

மேலும், நான் இயக்குநர்களின் அரசியல் கருத்துக்களை ஆதரிப்பதில்லை. சிலருக்கு சில காரணங்களுக்காக அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பிடிக்காமல் போகலாம். ஆனா நான் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பேன். நீங்களும் உங்களுடைய குடும்பத்துடன் சென்று படத்தை பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

click me!