
தமிழ்நாட்டில் குடியுரிமை உள்ள 18வயது நிரம்பிய ஓவ்வொருவருக்கும் தன்னுடைய அரசியல் தலைவனை தேர்தெடுக்கும் உரிமை உண்டு.
அப்படி அனைவராலும் முதலமைச்சராக தேர்தெடுக்க பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா... அவர் மறைவிற்கு பின் தற்போது அரசியலில் நிகழ்த்து வரும் மாற்றங்கள் திரைப்படத்தையும் மிஞ்சும் கதைபோல் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது உள்ள அரசியல் நிலைமை குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்....
காமெடி நடிகர் கருணாகரன்... மக்கள் மன்றம், என்றுமே மன்னிக்காது. மறவாது. என கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீ பிரியா ' வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளவர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தான் சரி, ஏன் அப்படி நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடகி சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் ரவீந்திரன் ' உலகில் மிகப்பெரிய ஜனநாயகம் இதுவா என ட்வீட் செய்துள்ளார் .
இயக்குனர் சீனு ராமசாமி 'ரகசிய வாக்கெடுப்பு மரியாதையை பெற்றுத்தந்திருக்கும்.... என கூறியுள்ளார்
கருணாநிதியின் பேரன் நடிகர் அருள்நிதி ரீ- எலெக்க்ஷன் வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.
இதில் இருந்து தற்போது நியமித்துள்ள ஆட்சி பிரபலங்கள் யாருக்கும் மனநிறைவாக இல்லை என்பது போல் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.