
தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி வெப் சீரிஸானா 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் தொடரை தடை செய்யவேண்டும் என எதிர்ப்பு குரல் தமிழகத்தில் வலுத்துள்ள நிலையில், சமந்தாவின் நடிப்பை பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அமேசான் ஓடிடியில் தளத்தில் ஜூன் 4 ஆம் தேதி வெளியான 'தி ஃபேமிலிமேன் 2 ' வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியான போதே தமிழக அரசியல் வாதிகள் பலர், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், அவர்களுக்கு கோரிக்கை வைத்ததுடன், தமிழக அரசும் இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இப்படி ஒரு பக்கம் கடுமையாக 'தி ஃபேமிலிமேன் 2 ' தொடருக்கு எதிர்ப்புகள் வலுத்தாலும், மறுபுறம் திரை உலக பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடித்துள்ள சமந்தாவின் நடிப்பை பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் தற்போது, பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
'தி ஃபேமிலிமேன் 2 ' தொடரில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாகவும் அவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றும் அதேபோல், சமந்தாவின் நடிப்புக்கு தான் தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ராஜி என்ற கேரக்டரை எவ்வளவு திறமையாக சமந்தா கொண்டு சென்றுள்ளார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் சமந்தா இந்த வெப் தொடருக்காக, டூப் போடாமல் நடித்த சண்டை காட்சியின் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை பார்த்து விட்டு, நடிகை கீர்த்தி சுரேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லாவண்யா திரிபாதி, ராஷ்மிகா மந்தனா, உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆச்சர்யத்தோடு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.