
முட்டாள்... நீங்களே துப்பிக் கொள்ளுங்க... நடிகர் சூரியாவை குள்ளன் என கலாய்த்த தொகுப்பளினிககளை கண்டபடி திட்டுகிறார்கள். கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
பிரபல தொலைக்காட்சியில் சினிமா கிசுகிசு குறித்து பேசிய இரு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கலாய்க்கும் விதமாக பேசினர். அதில் சூர்யா படத்தில் அமிதாப்பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என ஒரு தொகுப்பாளினி கலாய்த்தார். அதற்கு இன்னொரு தொகுப்பாளினியோ இருவரையும் உட்கார வைத்து படமாக்கினால், பிரச்சனையே இல்லை என கிண்டலடித்தார்.
இந்த தொகுப்பாளினிகளின் அநாகரிகமான பேச்சால் சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்தை உள்ளனர். தற்போது இந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கும், பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரியாவின் நண்பர்கள் அந்த தொகுப்பாளினியை கண்டபடி கழுவி ஊத்தி வருகின்றனர்.
அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? @SunMusic என சன் மியுசிக் சேனலை டேக் செய்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
முட்டாள் ******** மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். கண்ணாடியை பார்த்து உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள் சங்கீதா, நிவேதிதா என்று சூரியாவின் உறவினர் ஞானவேல்ராஜா ட்வீட்டியுள்ளார்.
'இப்படை வெல்லும்', 'தூங்காநகரம்' படங்களின் இயக்குநர் கௌரவ் நாராயணன் தனது கோபத்தை வெளிபடுத்தும் விதமாக “ஒரு சிறந்த நடிகரைப் பற்றி கமென்ட் அடிக்கிறதுக்கு இந்த சோ கால்ட் விஜேக்களுக்கு தகுதி இல்லை. முதலில் ஒரு படத்தில் நடிச்சிட்டு அப்புறமா ஒரு நடிகரை பத்தி கமென்ட் அடிங்க" என கோபமாக ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து ட்வீட் செய்த டைரக்டர் விக்னேஷ் சிவன், "இப்போ எல்லாம் திரைத் துறையினரை எல்லோருக்கும் இளிச்சவாயன்களாக நினைச்சிட்டாங்க. அவ்வளவு மரியாதைக்குரிய மனிதருக்கு சுத்தமா மரியாதையே கொடுக்கல" என வருந்தியுள்ளார்.
நடிகர் கருணாகரன் "உங்களுக்கு ஒரு நிகழ்ச்சிய நடத்த தகுதி இல்லைன்னா, ப்ளீஸ் இப்படி முட்டாள்தனமா நடத்தாதீங்க" என கண்டித்துள்ளார்.
எங்கள் அண்ணன் சூர்யாவை கிண்டல் செய்ததற்காக சங்கீதா, நிவேதிதா என்ற இரண்டு பெண்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனையாக்கி வழக்கு போடுவோம் என்கிறார்கள் சூர்யா ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஞானவேல்ராஜா அந்த இரண்டு தொகுப்பாளினிகளை முட்டாள்கள் என திட்டிய ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் வா தலைவா உன்னை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்கின்றனர்.
மற்றொரு ரசிகரோ... இவரு உயரத்த தப்ப பேசனவங்களுக்கு தெரியாது இவரால இன்னக்கி எவ்ளோ பேரு படிக்குறங்கனு சில சில்ற வரிசையில் இதோ இரண்டு குடும்ப உத்தம பத்தினிகள் என டிவிட்டியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.