
விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சின் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் நடிகை ஓவியா.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ஓவியா கலகலப்புடனும் சிரித்து கொண்டும், நடனமாடி கொண்டும், பாட்டு பாடி கொண்டும் அனைவரின் பார்வையும் ஈர்த்து வந்தார்.
இதையடுத்து அந்த பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற ஆரவ் மீது காதல் வசப்பட்டார். அந்த தருணம் ஓவியாவின் கலகலப்பு வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதனிடையே ஓவியாவின் கலகலப்பும் நேர்மையான பேச்சும் மக்களை வெகுவாக கவர்ந்து இளைஞர்கள் மத்தியில் ஓவியா ஆர்மி என்ற பட்டாளமே உருவாகியுள்ளது.
முதலில் ஓவியாவின் காதலை அங்கீகரிப்பது போன்று பாவனை காட்டினாலும் பின்பு காதலிக்கவில்லை என கராராக சொல்லிவிட்டார் ஆரவ்.
போட்டியாளர்கள் அனைவராலும் ஒதுக்கப்பட்ட பரணிக்கு பாய் பரணி என விடை கொடுத்து அனுப்பியவர் ஓவியா மட்டுமே. அந்த குரல் கண்டிப்பாக வெற்றி பெறும் என பரணியோடு சேர்த்து அனைத்து மக்களும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் காதல் தோல்வியால் வெளியேற முடிவெடுத்தார் ஓவியா.
அதேபோல் பைத்தியம் பிடிக்காத குறையாய் வெளியேயும் வந்தார். தன்னை காயப்படுத்தியவர்களை அருகில் நெருங்க விடாமால் யாருடைய உதவியும் தேவையில்லை எனக்கூறி தனது துணிமணிகளை பேக் செய்த ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று நாடுமுழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா தனது நண்பர்களுடன் சிட்டி செண்டரில் நண்பர்கள் தினத்தை கொண்டாடினார்.
அங்கு குவிந்த ஓவியா ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ஓவியா அவரது பாணியில் பறக்கும் முத்தம் கொடுத்து தனது நன்றியை தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.