
ஓவியா வெளியேறும்போது கடந்த 5 வாரங்களாக உடன் இருந்த யாருக்கும் பிரியாவிடை கூட கொடுக்காமல் இந்த எமோஷனல் ட்ராமா எல்லாம் வேண்டாம் என கூறி சிங்கள் பாய் கூட சொல்லாமல் கிளம்பினார்.
இவரின் இந்த நடவடிக்கை பலரது மனதை காயப்படுத்தியது. மேலும் பல முறை ரைசா ஓவியா பேச வரும் போதெல்லாம் "நீங்க ஏன் கிட்ட பேச வேண்டாம் உங்க கிட்ட பேச பிடிக்கவில்லை" என்றும், ஏதாவது ஓவியா கருத்து சொன்னாலும் அதற்கு அவரை ஹர்ட் செய்துள்ளார்.
இவை அனைத்தையும் நினைத்து ஓவியா வெளியேறியதும் நினைத்து அழுதார் ரைசா. அவருக்கு சினேகன் மற்றும் காயத்ரி ஆகியோர் சமாதானப்படுத்தும் போது தன்னுடைய தவறுகளை அவர்களிடம் கூறி நான் அப்படி செய்திருக்க கூடாது என உண்மையாகவே மனம் வருந்தி அழுதார்.
இதை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்த ஜூலி கண்களில் தண்ணீரே வராமல் ஒரு நிமிடம் அழுவது போல் செய்தார். இதனை பலரும் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.