திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கடந்த 30ம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிப்படுத்தி பேசியது தொடர்பான வீடியோ வைரலானது.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கடந்த 30ம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிப்படுத்தி பேசியது தொடர்பான வீடியோ வைரலானது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதில், இந்து மதத்தினரை மனவேதனை அடைய வைத்துள்ளதுடன், சமூகத்தில் இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் நோக்கில் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் கவிஞரும், உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.