கமலை தொடரும் சர்ச்சைகள்... - இந்து மதத்தை அவமதித்ததாக கோர்ட்டில் வழக்கு

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 11:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
கமலை தொடரும் சர்ச்சைகள்... - இந்து மதத்தை அவமதித்ததாக கோர்ட்டில் வழக்கு

சுருக்கம்

case filed on high court against kamal

மகாபாரதத்தை இழிவு படுத்தி பேசியதாக கூறி, நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், வளவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கமல், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
நடிகை ராஷி கண்ணா கேரவனில் 50,000 திருட்டு! கைவரிசை காட்டிய ஊழியர் - சிக்கியது எப்படி? முழு விவரம்!