நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ், இதுவரை ஏற்று நடித்திராத, மாறுபட்ட கதை களத்தில், வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பீரியாடிக் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம், மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் எந்த வித அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, தற்போது உருவாகியுள்ள முதல் பாகம் 1940களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளளார்.
undefined
தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க, முக்கிய கீ ரோலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
அதன்படி தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம், டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் தனுஷ் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
He Arrives in 100 Days 😎 DECEMBER 15th , 2023 Worldwide Release 💥 pic.twitter.com/0WFEFJp4bG
— Sathya Jyothi Films (@SathyaJyothi)