அப்பாவை தொடர்ந்து, நானும் ஹீரோவாக போகிறேன் என தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த வாரிசு ஹீரோ, பிரபல இளம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி விட்டு, தற்போது பிரேக்கப் செய்துள்ள தகவல் சமூக வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.
இந்த வாரிசு நடிகரின் அப்பா, பார்க்க கருப்பாக இருந்தாலும் திரைப்படங்களை சிறப்பாக தேர்வு செய்து நடிப்பவர். குறிப்பாக காதல் தோல்வி படங்களில் இவரின் நடிப்பை அடிச்சுக்க ஆளே இல்லை. இவரின் காதல் தோல்வி பாடல்கள், இன்றுவரை ரசிகர்களால் அதிகம் விரும்பி கேட்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த இந்த நடிகர், சில சமாச்சாரங்களில் சிக்கி சிறை வரை போய் வந்த நிலையில்... மீண்டும் தன்னுடைய மகனுடன் ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு, உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அப்பாவை தொடர்ந்து, மகனும் முன்னணி ஹீரோவாக மாற வேண்டும் என தற்போது வரை விடாப்பிடியாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், ஓரளவு வெற்றி பயணத்தையும் எட்டி உள்ளார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இந்த வாரிசு நடிகருக்கு, ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரபல நடிகை ஒருவரில் காதல் வலையில் சிக்கிய, இந்த வாரிசு நடிகர்... தனியாக வீடு ஒன்றையே வாங்கி அதில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அம்மணியும் எப்படியும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என கணக்கு போட்டு, சினிமாவுக்கு ஒரு சிறு பிரேக் கொடுத்துவிட்டு நடிகருடன் ஜாலியாக என்ஜாய் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் கசிய துவங்கிய நிலையில், ரகசிய உறவு பற்றிய தகவல் வெளியே வந்தால், சினிமா வாழ்க்கையே பறிப்பு விடுமோ என்கிற பயத்தில் நடிகையை நைசாக கழட்டி விட்டுவிட்டு, இந்த வாரிசு நடிகர் ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
நடிகரை நம்பி கனவு கோட்டையில் வாழ்ந்து வந்த அந்த நடிகை... அவரை பிரிய மனம் இன்றி, எவ்வளவோ சமாதானம் செய்தும் நடிகர்... ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற மெண்டாலிட்டியில் அவரை பிரேக் அப் செய்வதில் மிக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறித்து. எனவே அடுத்ததாக அந்த நடிகை என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.