பூஜையுடன் துவங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம்..!

Published : Sep 22, 2022, 04:35 PM IST
பூஜையுடன் துவங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம்..!

சுருக்கம்

தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே போடப்பட்டது.   

கேப்டன் மில்லர்  படம், குறித்த தகவல் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக,  திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே போடப்பட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

மேலும் செய்திகள்: ஆச்சர்யம் ஆனால் உண்மை! உடலில் கத்தியே வைக்காமல் நடிகர் ராஜு ஸ்ரீவாஸ்தவாவுக்கு செய்யப்பட்ட உடல்கூறாய்வு! எப்படி
 

இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதி , ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார், நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். “கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

மேலும் செய்திகள்: சிறுமலை காட்டிற்குள் ஆக்ஷனில் அதிரடி காட்டிய விஜய் ஆண்டனி..! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!
 


 
கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்