’ரஜினி, கமல் இருவருமே என்னை சந்திக்க மறுத்தார்கள்’ ...பிரபல ஒளிப்பதிவாளர் சொல்லும் ஷாக் சீக்ரெட்

By vinoth kumarFirst Published Dec 8, 2018, 10:53 AM IST
Highlights

‘சமூக நலன் சார்ந்து நல்ல விஷயங்களைச் செய்ய விரும்பும் என்னை கமலும் ரஜினியும் சந்திக்க விரும்பவில்லை. இவர்களிடம் எப்படி நல்ல அரசியலை எதிர்பார்க்கமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன்.

‘சமூக நலன் சார்ந்து நல்ல விஷயங்களைச் செய்ய விரும்பும் என்னை கமலும் ரஜினியும் சந்திக்க விரும்பவில்லை. இவர்களிடம் எப்படி நல்ல அரசியலை எதிர்பார்க்கமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன்.

ரேவதியின் முன்னாள் கணவரும், இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும், இயக்குநருமான சுரேஷ் மேனன் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இதைத் தெரிவித்தார்.

" 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். உதவி ஒளிப்பதிவாளர் வேலையில் ஆரம்பித்து, இயக்குனர், நடிகர் என எல்லா வேலைகளையும் செய்துவிட்டேன். சினிமா பணிகள் ஒருபக்கம் இருந்தாலும், சமூக நலன் சார்ந்த பணிகளிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை ராஜ்பவன் கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அந்த பாதையை ஒருவழி சாலையாக மாற்ற ஆலோசனை தந்தேன். அதன் அடிப்படையில் தான் அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதுபோல நிறைய இலவச ஆலோசனைகள் அளித்து வருகிறேன். இதனால் என்னை அவ்வப்போது தலைமை செயலகத்தில் பார்க்கலாம். இந்த வேலைகளால் பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஒரு மன திருப்திக்காக இதனை செய்து வருகிறேன்.

இவையல்லாமல் சமூக நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன். இது தொடர்பான  சில ஆலோசனைகளுடன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. சரி அவர் போகட்டும் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் ரஜினி, கமலை சந்திக்கவும் நேரம் கேட்டேன். ஆனால் அவர்களுக்கும் என்னை சந்திக்க விருப்பமில்லை. இதற்கு கூட நேரமில்லாத இவர்கள் என்ன அரசியல் செய்துவிடப்போகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை’என்கிறார் சுரேஷ் மேனன்.

click me!