
ஹீரோக்களின் ஈகோ மோதலால் தொடர்ந்து அசிங்கப்பட்டுவரும் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க இப்போது குட்டி ஹீரோக்கள் கூட யோசிப்பதில்லை. ட்விட்டர் பக்கம் போனால் ஆளாளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிடுகிறார்கள்.
அரையாண்டு விடுமுறைகள் வரும் டிசம்பர் மூன்றாவது வார வெளியீட்டுப் போட்டிகளில் வளரும் நடிகர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கமும் ஒன்று. விஷாலின் நெருங்கிய நண்பரான இவர் தனுஷின் ‘மாரி2’ ரிலீஸுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அது எடுபடாமல் போகவே நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்துவரும் குழப்பங்கள் குறித்து அதே அளவுக்கு குழப்பமான ஒரு ட்விட் போட்டார்...
கட்டுப்பாடுகள் உண்டு... கட்டுப்பாடுகள் இல்லை.... கட்டுப்பாடுகள் உண்டு... கட்டுப்பாடுகள் இல்லை.... இதுதான் விதிமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் நீதி. எனக்கும் மற்றவர்களுக்கும் இரண்டாவது முறையாக இதுபோல நடக்கிறது. பிறகு எதற்காக விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன? #அமைப்புசரியில்லை, #உள்ளுக்குள்அரசியல். எதுவாக இருந்தாலும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் டிசம்பர் 21 அன்று வெளிவருகிறது. தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டங்களில் கடந்த ஒரு மாதமாகக் கலந்துகொண்டபிறகு புரிந்துகொண்டது, விஷால் இதற்குக் காரணமல்ல. ஏற்கெனவே சொன்னதுபோல உள்ளுக்குள் அரசியல் உள்ளது. விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்குத்தான்’ என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் விஷ்ணு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.