கொரோனாவால் பிரபல நடிகை மரணம்... அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 12, 2020, 06:13 PM IST
கொரோனாவால் பிரபல நடிகை மரணம்... அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட்...!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் ஹாலிவுட்டை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் ஹாலிவுட்டை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அமெரிக்காவை அடுத்து பிரிட்டனில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 2 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 980 யை கடந்துள்ளது. மொத்தம் இங்கிலாந்தில் மட்டும் இந்த வைரஸ் தொற்றிற்கு கிட்டதட்ட  9ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் பிறந்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹிலாரி ஹீத். 1968ம் ஆண்டு வெளியான மைக்கேல் ரீவ்ஸின் விச்பைண்டர் என்ற மூலம் அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஹிலாரி ஹீத், அவ்புலி பிக் அட்வென்ச்சர், நில் பை மவுத் ஆகிய படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். 1974ம் ஆண்டு டங்கன் ஹீத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹிலாரிக்கு லாரா என்ற மகளும், டேனியல் என்ற மகனும் உள்ளனர். இறுதியாக 2014ம் ஆண்டு ஜமைக்கா இன் என்ற குறுத்தொடர் ஒன்றை தயாரித்தார். 

74 வயதாகும் ஹிலாரி ஹீத் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிலாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அலெக்ஸ் வில்லியம் சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்
மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!