Breaking: கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!!

Published : Nov 23, 2021, 03:26 PM IST
Breaking: கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வரும் கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!!

சுருக்கம்

அமெரிக்கா சென்றுவந்த வேகத்தில், தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் (Kamalhassan) நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth).  

அமெரிக்கா சென்றுவந்த வேகத்தில், தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் கமல் ஹாசன் சிறிய வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இருவருமே முன்னணி நடிகர்களாக தங்களை நிலை நிறுத்தி கொண்டது ஒரே காலத்தில் தான். அப்போதில் இருந்து இப்போது வரை, நல்ல நண்பர்களாக இருக்கின்றனர் கமல் மற்றும் ரஜினிகாந்த். இந்நிலையில், தற்போது கமல் உடல் கொரோனா பாதிப்புக்கு ஆளானதை அறிந்த ரஜினிகாந்த், போன் செய்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், லேசான இருமல் இருந்ததால், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதை அடுத்து கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, இன்றைய தினம் ரஜினிகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்... கமல்ஹாசனுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!