தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராதிகா!

By manimegalai aFirst Published Apr 7, 2021, 2:36 PM IST
Highlights

நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்காக, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த ராதிகா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். தேர்தலுக்காக, தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த ராதிகா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ராதிகாவும்... மார்ச் மாதம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசையை போட்டுக் கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ராதிகா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார்  பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடி யா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடான் நிறுவனம் சார்பில் 7  கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்,  சைதாப்பேட்டை 3 -வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார்,  பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சரத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தாலும், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளதால் சரத்குமார் மீதான ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ராதிகா ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதி மன்றத்தில் ஆராஜாகததற்கு காரணம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவித்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டும் அவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!