கண், காது, முகம் ,முழுவதும் வீங்கிவிட்டது..! நடிகர் பார்த்திபனின் அதிர்ச்சி ட்விட்!

Published : Apr 07, 2021, 10:42 AM IST
கண், காது, முகம் ,முழுவதும் வீங்கிவிட்டது..! நடிகர் பார்த்திபனின் அதிர்ச்சி ட்விட்!

சுருக்கம்

கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில்... 45 வயதை கடந்த அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இரண்டாவது நிலை தடுப்பூசி போட்டு கொண்டதால் அலர்ஜி ஆகி கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில்... 45 வயதை கடந்த அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இரண்டாவது நிலை தடுப்பூசி போட்டு கொண்டதால் அலர்ஜி ஆகி கண், காது, முகம் முழுவதும் வீங்கி விட்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து... இந்தியாவில் சற்று குறைந்து கொண்டே வந்த நிலையில்... தற்போது மீண்டும் இரண்டாவது அலையை துவங்கி, கொடூர முகத்தை காட்டி வருகிறது. இதனால் நாளுக்கு நாள், பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்க பட்டு, உரிய சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதே போல் மற்றொரு புறம் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற, கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில், பிரபலங்கள் மற்றும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், மாஸ்க் அணிந்து, அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வாக்களித்தனர். பலர் தங்களுடைய ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றியதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், கொரோனாவின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டதால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதாக ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,  "வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில். என தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?